விஜய் ரசிகர்கள் மீது தடியடி!

By Staff

காஞ்சிபுரத்தில் நடந்த விஜய் படப்பிடிப்பின்போது விஜய், நமீதா ஆகியோரிடம் கைகுலுக்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்ததால் போலீஸார்தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

போக்கிரியை வெற்றிப் படமாக்கிய திருப்தியுடன் அடுத்த படத்திற்குப் போய் விட்டார் விஜய். பரதன் இயக்கத்தில், அப்பச்சன் தயாரிப்பில் அழகியதமிழ் மகன் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஷ்ரியா, நமீதா என இரு ஜோடிகள். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை வரை படப்பிடிப்புநடைபெற்றது.

இதற்காக விஜய், ஷ்ரியா, நமீதா மற்றும் படக்குழுவினர் வந்திருந்தனர். விஜய் வருவதை அறிந்ததும் அக்கம் பக்க ஊர்களிலிருந்துநூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர்.

இளைய தளபதி வாழ்க என்று கோஷமிட்ட அவர்கள் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கவும், கை குலுக்கவும் முண்டியடித்தனர். கூடவே, அழகியகுதுப்மினாராக நின்று கொண்டிருந்த நமீதாவிடமும், சிலிர்க்க வைக்கும் ஷ்ரியாவிடமும் கை குலுக்கவும் கும்பலாக முண்டியடித்து நெருங்கினர்.

நமீதாவைப் பார்த்து விட்ட பின்னர் கூட்டத்தினரால் பொறுமை காக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரசிகர்களின் ஆவல் அதிகமாகி, ரசாபாசம் ஆகிவிடுமோ என்ற நிலை உருவானது. இதையடுத்து போலீஸார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. 15ம் தேதி வரை இங்கேயே முகாமிட்டுபடப்பிடிப்பை நடத்தவுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X