தாய்லாந்து தீவில் விஜய், நமீதா!

By Staff

அழகிய தமிழ் மகன் படத்திற்காக விஜய்யும், நமீதாவும் தாய்லாந்தின் புக்கெட் தீவில் குத்துப் பாட்டுக்கு ஆடும் காட்சியை விரைவில் ஷூட் செய்யவுள்ளனர்.

அஜீத்துடன் பில்லாவில் நடித்து வரும் நமீதா, சைட் பை சைடாக விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவருக்கு காமெடி கலந்த கிளாமர் வேடம்.

தூள் படத்தில் ரீமா சென் நடித்தது போன்ற கலக்கலான கேரக்டரில் நடித்து வரும் நமீதாவுக்காக நச்சென்று இரண்டு குத்துப் பாட்டுக்களை வைத்துள்ளனர்.

அதில் ஒரு பாட்டை தாய்லாந்தின் புக்கெட் தீவில் படமாக்கவுள்ளனர். இதில் அவருடன் விஜய்யும், குரூப் டான்ஸர்களும் இணைந்து அட்டகாச ஆட்டம் போடவுள்ளனர்.

விரைவில் இதற்காக புக்கெட் தீவுக்குப் புறப்படவுள்ளதாம் அழகிய தமிழ் மகன் பட யூனிட்.

முதலில் நமீதா ரோலை சிறிதாகத்தான் யோசித்து வைத்திருந்தனர். ஆனால் நடிக்க வந்த பின்னர் நமீதாவின் ஈடுபாடு பிளஸ் ஒத்துழைப்பைப் பார்த்து காட்சிகளையும், பாடல்களையும் கூட்டி அமர்க்களப்படுத்தி விட்டனராம்.

நமீதாவின் அட்டகாச கிளாமரும், ஆட்டமும், பாட்டமும், விஜய் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக இருக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X