»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய் நடிக்கும் "தமிழன்" படப்பிடிப்பின்போது பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில், துணை நடிகையானலலிதா பலத்த தீக்காயம் அடைந்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் "தமிழன்" படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஜி.வி. பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் இயக்குநர் மஜீத், ஒரு குடிசை தீப்பிடித்து எரியும் காட்சியைப்படமெடுக்கத் திட்டமிட்டார்.

மகாபலிபுரம் கடற்கரைப் பகுதிகளில்தான் இக்காட்சி படமாக்கப்படவிருந்தது. அங்கு குடிசைகள் போடப்பட்டுசெட் தயாராகிவிட்டது.

இந்தக் குடிசைகளுக்கு வில்லன்கள் தீ வைப்பது போலவும், அவற்றை நோக்கி குண்டுகளை வீசி எறிவது போலவும்,இதையடுத்து அவற்றில் வசிக்கும் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவருவது போலவும் படம் பிடிக்க இயக்குநர்திட்டமிட்டிருந்தார்.

இக்காட்சியில் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், துணை நடிகைகள் நடித்தனர்.

இதற்காக ஒவ்வொரு குடிசையிலும் பெட்ரோல் குண்டுகள் வைத்து வெடிக்க வைக்கப்பட்டன. ஆனால், ஒருகுடிசையில் மட்டும் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

குறிப்பிட்ட குடிசை அருகே துணை நடிகையான லலிதா நடந்து வந்து கொண்டிருந்தபோது, யாருமே எதிர்பார்க்காதவிதமாக அந்த பெட்ரோல் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால் லலிதா அணிந்திருந்த நைலான் சேலை உடனடியாகத் தீப்பிடித்துக் கொண்டது. இதில் அவருடையஉடலின் பெரும்பகுதி தீயால் வெந்து விட்டது.

உடனடியாக லலிதா வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் இந்தக் காட்சியில் இல்லாததால், அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

Read more about: cinema tamilnadu thatstamil vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil