மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் டெல்லியில் நடக்கும் விஜய் பட ஷூட்டிங்; என்ன மேட்டர் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சன் பிக்சர்ஸ்

மீண்டும் சன் பிக்சர்ஸ்

சுறா, சர்கார் படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் எளிமையான முறையில் நடத்தப்பட்ட பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன், நடிகை அபர்ணா தாஸ், பிக் பாஸ் கவின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜார்ஜியா

ஜார்ஜியா

சமீபத்தில் வெளியான F9 படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்ட ஜார்ஜியாவில் தான் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், வெளிநாடுகளுக்கு விமானங்கள் பறக்கத் தொடங்கியதும் பீஸ்ட் படக் குழு தனது முதல் ஷெட்யூலை அங்கே முடித்து விட்டு திரும்பியது.

வாயில் புல்லட்

வாயில் புல்லட்

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வாயில் சிகரெட் வைத்திருப்பது போல விஜய் கொடுத்த போஸ் சர்ச்சையை கிளப்பியதும் அதிரடியாக அந்த ஃபர்ஸ்ட் லுக் மாற்றப்பட்டது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக்கில் கையில் துப்பாக்கியுடனும் வாயில் புல்லட் உடனும் தளபதி விஜய் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்தி இருந்தார்.

புட்டபொம்மா

புட்டபொம்மா

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டேவுக்கு பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திடீரென அவரது மார்கெட் உச்சத்திற்கு செல்லவே பீஸ்ட் படத்திலும் பூஜா ஹெக்டே புக் செய்யப்பட்டார்.

Recommended Video

என்னோட BIOGRAPHY யார் DIRECT பண்ணனும் | Actress Sona Chat Part-02 | Filmibeat Tamil
சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

பீஸ்ட் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் பிரம்மாண்ட மால் போன்ற செட் போட்டு படமாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டன. விமான நிலையம் அருகேவும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஷாக் கொடுத்த கார்த்தி

ஷாக் கொடுத்த கார்த்தி

தளபதி விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்தின் அருகே நடிகர் கார்த்தியின் சர்தார் பட ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தது. சர்தார் படத்தில் வயதான தோற்றத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் நிலையில், அதே கெட்டப்பில் நடிகர் விஜய்யை சந்தித்து அவருக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

தல தளபதி சந்திப்பு

தல தளபதி சந்திப்பு

கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர பட ஷூட்டிங்கிற்காக வந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தளபதி விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் அருகே நடப்பதை அறிந்து உடனடியாக அவரை அவரது கேரவனுக்கே சென்று பார்த்து பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

பீஸ்ட் படத்தின் அடுத்த ஷெட்யூல் தற்போது டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதற்காக நடிகர் விஜய் மற்றும் பீஸ்ட் படக் குழுவினர் விரைவில் டெல்லிக்கு பறக்க உள்ளனர். அங்கே சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே மாஸ்டருக்கு

ஏற்கனவே மாஸ்டருக்கு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் காலேஜ் போர்ஷன் முழுவதும் டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் தான் படமாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சேஃப் ஸோன்

சேஃப் ஸோன்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பும் தற்போது டெல்லியில் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்க்கு அங்கே ஷூட்டிங் நடத்துவது ரொம்பவே வசதியாக இருப்பதாகவும் அது கொஞ்சம் சேஃப் ஸோனாகவும் இருக்கிறதாம்.

கதைக்கு தேவைப்படுது

கதைக்கு தேவைப்படுது

சேஃப் ஸோனையும் தாண்டி இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கான் ஏஜென்ட்டாக நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் கதையே சர்வதேச அளவிலான கதை என்பதால் டெல்லி படப்பிடிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த பட பேச்சுவார்த்தைகள்

அடுத்த பட பேச்சுவார்த்தைகள்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் பக்காவாக பிளான் போட்டு பரபரவென படப்பிடிப்பை நடத்தி வருவதால், இந்த ஆண்டுக்குள் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. அதனால், தான் நடிகர் விஜய் அடுத்த படத்தின் பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.

தோழா இயக்குநர்

தோழா இயக்குநர்

கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி உடன் தான் அடுத்ததாக நடிகர் விஜய் இணைந்து நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவலாக இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

அதிகரிக்கும் சம்பளம்

அதிகரிக்கும் சம்பளம்

ஏற்கனவே பீஸ்ட் படத்திற்கு நடிகர் விஜய் 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தளபதி 66 படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் நடிகர் விஜய்க்கு பேசப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் பரபரப்பு தகவல்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளன. தென்னிந்தியாவிலேயே நடிகர் விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நபராக மாறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X