விரைவில் ரசிகர்களை சந்திக்க வரும் பிச்சைக்காரன் 2... இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவக்கம்
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வருகிறது பிச்சைக்காரன் 2 படம். இந்தப் படத்தின் முதல பாகம் விஜய் ஆண்டனிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தை அவரே இயக்கி வருகிறார். படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகங்களை காட்டி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

பிச்சைக்காரன் படம்
இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் சசி இயக்கத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் சாட்னா டைட்டஸ். வித்தியாசமான கதைக்களத்துடனும் அம்மா சென்டிமெண்ட்டுடனும் இந்தப்படம் வெளியானது.

பிச்சைக்காரன் 2வது பாகம்
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை விஜய் ஆன்டணியே இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படும் நிலையில் சில தினங்களாக யார் பிகிலி, ஆன்டி பிகிலி என்ற கேள்விகளுடன் படத்தின் பிரமோஷன் செய்யப்பட்டது.

ஆன்டி பிகிலி கேரக்டர்
இந்தப் படத்தின் கதாபாத்திரம்தான் ஆன்டி பிகிலி என்பதை வெளிப்படுத்தியிருந்தார் விஜய் ஆண்டனி. இந்த கேரக்டரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்றைய தினம் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
இந்தப் படம் தமிழில் பிச்சைக்காரன் 2 எனவும் தெலுங்கில் பிச்சாகுடு 2 என்ற தலைப்பிலும் உருவாகி வருகிறது. இதனிடையே படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் சீரியசாக மானிட்டரை பார்ப்பதாகவும் ஒரு காட்சியில் நடிப்பதாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











