Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் ஆண்டனியின் தமிழரசன் ஷூட்டிங் ஓவர்... விரைவில் வருகிறது இளையராஜாவின் தாலாட்டும் இசை
சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிவடைந்துள்ளது.
தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன், அடுத்து இயக்கும் படம், தமிழரசன். இதில் விஜய் ஆண்டனி ஹீரோ. ரம்யா நம்பீசன் ஹீரோயின்.
மலையாள நடிகர் சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
நான் செத்தா இந்த நடிகையின் கல்லறைக்கு பக்கத்தில்தான் எரிக்கனும்.. சர்ச்சை இயக்குநரின் கடைசி ஆசை!
இளையராஜா இசை
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கவுசல்யா ராணி தயாரிக்கிறார். இந்தப் படத்துக்காக இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி ஒரு பாடலை பாடியுள்ளார்.
விஜய் ஆண்டனி
இதுபற்றி அவர், 'இளையராஜா இசையை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அவர் இசையை கேட்டே, நான் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறேன் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பதை புரிந்துகொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆக்ஷன் அதிரடி
அதிரடி ஆக்ஷன் படமான இதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஸ்டைலிஷான படம் இது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்
பாடல் வெளியீட்டு
இந்தப் படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் நேற்றோடு முடிந்துள்ளது. இதை படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. படம் அடுத்த மாதம் வெளியாகிறது.