Don't Miss!
- Automobiles
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
- News
நெல்லை கல் குவாரி விபத்து..! பாறைக்கடியில் வந்த துர்நாற்றம்! 6வது நபரின் நிலை என்ன? பரபர பின்னணி..!
- Finance
18 மாத சரிவில் இருந்து மீண்டும் வரும் ரூபாய்.. இனி எப்படியிருக்கும்?
- Sports
கோலியின் கனவுக்கு ரோகித் ஆப்பு.. முக்கிய அணியிலிருந்து விலகல்.. ஆர்சிபிக்கு கஷ்டம்
- Technology
பட்ஜெட் விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரத்தம் படத்துக்காக விஜய் ஆண்டனி செஞ்ச வேலையை பாருங்க... சூப்பர்தான்!
சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ரத்தம் படம் உருவாகியுள்ளது. படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் வெளிநாடு செல்லவுள்ளது.
'விக்ரம்’ படம் கதை இதுதானா?....கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மூவரும் கைதிகளா?...

நடிகர் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து சிறப்பான பல படங்கள் உருவாகி வருகின்றன. சிறப்பான கதைகளை தேர்ந்தெடுக்கும் வித்தை அவருக்கு சிறப்பாகவே கைக்கூடியுள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் கோடியில் ஒருவன் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது.

சிறப்பான திரைக்கதை
எளிமையான கதைக்களங்களாக இருந்தாலும் சிறப்பான திரைக்கதையுடன் அவரது படங்கள் ரிலீசாகி வருகின்றன. அடுத்ததாக அவரது நடிப்பில் தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், பிச்சைக்காரன் 2 போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார்.

இயக்கத்திலும் முத்திரை
இந்தப் படம் மூலம் இசை, நடிப்பை தொடர்ந்து இயக்கத்திலும் தன்னுடைய முத்திரையை பதிக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

இறுதிக்கட்டத்தை எட்டிய ரத்தம்
இதனிடையே அவரது நடிப்பில் தற்போது உருவாகிவரும் ரத்தம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சிஎஸ் அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு விரைவில் வெளிநாடு செல்லவுள்ளது.

டப்பிங்கை துவக்கிய விஜய் ஆண்டனி
இதனிடையே படத்தின் டப்பிங் பணிகளை விஜய் ஆண்டனி இன்றைய தினம் துவங்கியுள்ளார். இதன் புகைப்படங்களை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாம்.

3 நாயகிகள்
படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் என மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். மூவருக்கும் படத்தில் முக்கியமான கேரக்டர் என கூறப்பட்டுள்ளது. இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் பங்கஜ் போஹ்ரா படத்தை தயாரித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
என் கண்ணன் படத்தின் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார். இதுவரை உருவாகியுள்ள படத்தின் போர்ஷனை பார்த்துள்ள தயாரிப்பாளர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.