சிம்பு பிறந்தநாளில் துவங்கும் விஜய், முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேது துவங்குகிறது.
ஜில்லா படத்தின் வெற்றிக் களிப்பில் இருக்கும் விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். துப்பாக்கி படத்தில் சேர்ந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்குகிறது. (பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளும் கூட).

5 மாதங்கள்
விஜய், முருகதாஸ் படத்தின் படிப்பிடிப்பை 5 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். படத்தில் எதிர்நீச்சல் பட புகழ் சதீஷும் நடிக்கிறார்.

நாயகி
விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பார் என்று கூறப்பட்டது. மேலும் சமந்தாவின் பெயரும் அடிபட்டது. இறுதியில் சமந்தாவுக்கு தான் விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரியங்கா
உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த தமிழன் படம் மூலம் தான் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு தான் பாலிவுட்டில் பிரகாசிக்கத் துவங்கினார். அவர் தனது முதல் ஹீரோவான விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திலும் விஜய் ஒரு பாடலாவது பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











