மைக் டைசன் உடன் மோதும் விஜய் தேவரகொண்டா.. அமெரிக்கா விரைந்த படக்குழு!

சென்னை: நடிகர் விஜய் தேவர கொண்டா இப்பொழுது லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பூரி ஜெகநாத் இந்த படத்தை இயக்க பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில் உலக புகழ் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க படப்பிடிப்புக்காக லைகர் படக்குழு அமெரிக்கா விரைந்துள்ளது.

சென்சேஷனல் ஹிட்

சென்சேஷனல் ஹிட்

தென்னிந்திய சினிமாவின் யூத் ஐகானாக இருந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் சென்சேஷனல் ஹிட்டடித்ததோடு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இதில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிரம்மாண்ட திரைப்படத்தில்

பிரம்மாண்ட திரைப்படத்தில்

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக்கூடிய நடிகராக விஜய் தேவரகொண்டா மாறியுள்ளார். தமிழ் சினிமாவிற்கு நோட்டா திரைப்படத்தில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டார். கடைசியாக வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மாறாக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அடுத்ததாக பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா பாக்ஸராக

விஜய் தேவரகொண்டா பாக்ஸராக

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளர்கள் கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி இணைந்து தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள பூரி ஜெகநாத் இயக்கிவருகிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார்.

லைகர்

லைகர்

இதுவரை சாக்லேட் பாயாக சினிமாவில் வலம் வந்த விஜய் தேவர்கொண்டா இப்பொழுது முரட்டுத்தனமான பாக்ஸராக நடிக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்திற்கு லைகர் என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

லைகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செம ஹிட்டடித்த விட்டது. மேலும் இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது

மைக் டைசன் உடன் குத்துச் சண்டை

மைக் டைசன் உடன் குத்துச் சண்டை

முழுக்க முழுக்க குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதால் உலக புகழ் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்த படத்தில் நடிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பல்வேறு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்பொழுது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மைக் டைசன் இருவரும் மோதும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. அதற்காக படக்குழு இப்பொழுது அமெரிக்கா விரைந்துள்ளது. அங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், விஜய் தேவரகொண்டா, சார்மி மற்றும் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X