லிகர்: லாஸ் வேகாஸில் படப்பிடிப்பு நிறைவு..அமெரிக்காவில் இருந்து அசத்தலாக அறிவித்த அனன்யா பாண்டே!

சென்னை: லிகர் படத்தின் லாஸ் வேகாஸ் ஷெட்யூல் நிறைவடைந்ததாக நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் படம் லிகர். ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டா லீடிங் ரோலில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநரான பூரி ஜெகன்னாத் இயக்குகிறார்.

மைக் டைசன்..

மைக் டைசன்..

இந்தப் படத்தை கரண் ஜோஹர், சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரரான மைக் டைஸனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மைக் டைசன் இந்திய சினிமா இண்டஸ்ட்ரிக்கு என்ட்ரி கொடுக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 40 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. லாக்டவுன் நீக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்றது.

லாஸ் வேகாஸ் ஷெட்யூல்

லாஸ் வேகாஸ் ஷெட்யூல்

இந்நிலையில் படத்தின் இறுதிக் காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்களில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அனன்யா பாண்டே, லாஸ் வேகாஸ் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனன்யா பாண்டே குதிரை சவாரி

அனன்யா பாண்டே குதிரை சவாரி

மேலும் மஞ்சள் நிற டி ஷர்ட் கறுப்பு பேண்ட் மற்றும் கவுபாய் ஹேட் அணிந்து குதிரை சவாரி செய்யும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் நடிகை அனன்யா பாண்டே. நடிகை அனன்யா பாண்டே அடுத்தப்படியாக தீபிகா படுகோன் மற்றும் சிந்தான்ந்த் சதுர்வேதி ஆகியோர் நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X