அமெரிக்காவில் லைகர் பட ஷூட்டிங்... மைக் டைசனின் கலக்கல் போஸ் !

அமெரிக்கா : விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் லைகர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

விஜய்தேவரகொண்டா இப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வருகிறார்.

லைகர்

லைகர்

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் லைகர். இதில் அனனய் பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

குத்து சண்டை வீரராக

குத்து சண்டை வீரராக

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் லைகர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் , விஜயதேவரகொண்டா, மைக் டைசன், பூரி ஜெகநாத், கரன் ஜோகர், சார்மி,அனன்யா பாண்டே ஆகியோர் உள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

மைக் டைசன்

மைக் டைசன்

இந்திய சினிமாவில் முதல் முறையாக சர்வதேச குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் இப்படத்தில் கௌரவ வேடம் நடிக்கிறார். படத்தின் இறுதியில், அவரது கதாபாத்திரத்தை வைத்தே இப்படத்தின் முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் அக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி படமாக்கப்பட உள்ளது. மேலும் விஜய் தேவரகொண்ட மைக் டைசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துஇருந்தார் அது இணையத்தில் வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X