வெயிஸ்ட் கோட்டில் விஜய்.. வாரிசு படத்தின் ஹார்பர் சண்டைக் காட்சி புகைப்படங்கள் லீக்!

சென்னை: விசாகப்பட்டினத்தில் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மீண்டும் கசிந்து டிரெண்டாகி வருகின்றன.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் இதுவரை பல முறை கசிந்த நிலையிலும், படக்குழு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

வரிசையாக லீக் ஆகுது

வரிசையாக லீக் ஆகுது

வாரிசுன்னு டைட்டில் வைத்த ராசியோ என்னவோ தெரியவில்லை வரிசையாக நடிகர் விஜய் நடித்து வரும் முக்கிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து லீக் ஆகி வருகின்றன. ஏற்கனவே பெரிய வீடு செட்டுக்கு முன்பாக விஜய் மற்றும் ராஷ்மிகாவின் போர்ஷன் படம் ஆக்கப்பட்டு வந்த நிலையில், அந்த காட்சிகள் லீக் ஆகின. பின்னர், பைக்கில் வரும் ஒருவரை விஜய் அடித்துத் தள்ளுவது போன்ற காட்சிகளும் வெளியாகி டிரெண்டாகின.

சஸ்பென்ஸை ஓப்பன் பண்ண சரத்குமார்

சஸ்பென்ஸை ஓப்பன் பண்ண சரத்குமார்

வாரிசு படத்தை கண்டு கொள்ளாமல் தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் பண்ண டார்ச்சர் தாங்க முடியாமல் சோஷியல் மீடியாவுக்கே பிரேக் விட்டு விட்டார். இந்நிலையில், வாரிசு படத்தின் பக்கம் விஜய் ரசிகர்களை திருப்பும் விதமாக, அந்த படம் வெறும் ஃபேமிலி டிராமான்னு யாரு சொன்னது, வழக்கம் போல விஜய் படத்தில் வரும் அத்தனை மாஸ், அதிரடி காட்சிகள் அதிகமாவே இருக்கு என சஸ்பென்ஸை ஓப்பன் செய்து விட்டார்.

ஹார்பார் காட்சி லீக்

ஹார்பார் காட்சி லீக்

விசாகப்பட்டினத்தில் தற்போது ஹார்பரில் கப்பல் அருகே செம ஃபைட் சீன் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவுக்கு மேலும் தலைவலியை உண்டு பண்ணி இருக்கிறது. இயக்குநர் வம்சி போடும் பாதுகாப்புகளை எல்லாம் மீறி வாரிசு படத்தின் பல காட்சிகள் லீக் ஆகி வரும் நிலையில், ரிலீசுக்கு முன்பாக படமே வெளியாகி விடப் போகிறது உஷார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வெயிஸ்ட் கோட்டில் விஜய்

வெயிஸ்ட் கோட்டில் விஜய்

வாரிசு படத்தில் பெரிய செல்வந்தராக நடித்துள்ள நடிகர் விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கோட் சூட் போட்டு மாஸ் காட்டி இருந்தார். இந்நிலையில், தற்போது வெறும் வெயிஸ்ட் கோட் உடன் நடிகர் விஜய் சூப்பர் ஹேண்ட்ஸம் ஆக ஹார்பரில் நிற்கும் காட்சி சோஷியல் மீடியாவில் லீக் ஆகி விஜய் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

ஷாமை காப்பாற்றும் விஜய்

ஷாமை காப்பாற்றும் விஜய்

அண்ணன் ஷாமை ஹார்பரில் கடத்தி வைக்க தம்பி விஜய் வந்து காப்பாத்துவது தான் இந்த காட்சியின் கதையே என்றும் சமூக வலைதளங்களில் ஒரு கதை உலாவி வருகிறது. மேலும், அலா வைகுந்த புரமுலோ படத்தில் அல்லு அர்ஜுன் தனது தாத்தாவை காப்பாற்றி ஹார்பரில் சண்டை போடுவது போல ஷியாமை காப்பாற்ற விஜய் சண்டை போடுகிறாரா? என்றும் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X