விஜய் சேதுபதி 46 பட ஹீரோயின் வெளியிட்ட படப்பிடிப்புதள புகைப்படங்கள்..இப்போவே அள்ளுதே !

சென்னை: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை அனுகீர்த்தி வாஸ்.

இவர் இதற்கு முன்பு முகின்ராவ் ஹீரோவாக அறிமுகமாக இருந்த வெற்றி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

விஜய் சேதுபதி 46வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் குழுவுடன் குளுகுளுன்னு எடுத்த புகைப்படங்களை அனுகீர்த்தி வாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார்.

பிகினி படங்களை

பிகினி படங்களை

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்திருப்பவர் இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ். சமூக வலைதளங்களில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகிய இவர் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே பல கோடி ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் பல தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம் .இப்பொழுது தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமான முகின்ராவ் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக இருந்த வெற்றி என்ற திரைப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருந்தார் . இதில் நடிகை அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக ஒப்பந்தமாகி அறிமுகமாக இருந்தார்.

விஜய்சேதுபதி 46

விஜய்சேதுபதி 46

வெற்றி படம் தொடங்குவதற்கு சற்று தாமதமாகி வர அடுத்ததாக அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு விஜய் சேதுபதிக்கும் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி நடிக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படம் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இயக்குனர் பொன்ராமின் முந்தைய படங்களைப் போலவே முழுக்க முழுக்க வில்லேஜ் கதை களத்தை கொண்டு கலகலப்பான காமெடி திரைப்படமாக இந்த படமும் உருவாகி வருகிறது.பொதுவாகவே விஜய் சேதுபதி படம் என்றால் நல்ல கதை ,எதார்த்தமான நடிப்பு கொண்டு அவருக்கு மட்டும் அல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவர்க்கும் வெற்றி படமாகவே அமைந்துவிடுவது வழக்கம் .அந்த ராசியை வைத்து பார்த்தல் கண்டிப்பாக அனுகீர்த்தி வாஸுக்கும் நல்ல நேரம் தொடங்கிவிட்டது போலத்தான் தெரிகிறது .தொடக்கமே கோலாகலமாக இருப்பதை பார்த்த விஜய் சேதுபதி ரசிகர்களும் இவரை பாராட்டியும், வாழ்த்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.

இன்ஸ்டா குளிர்ச்சி

இன்ஸ்டா குளிர்ச்சி

தனது சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை பகிரும் இவர் ,முதல் படத்தில் தாறுமாறான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து நடித்தது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும்.அதனால் இப்படத்தை பற்றி பல எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடத்தில் மட்டும் இல்லாமல் திரைத்துறையினரிடமும் நிலவுகின்றது . தனது ரசிகர்களை மனதில் வைத்து கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக பல கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களையும் போட்டு கொண்டு தான் இருக்கிறார் அனு.

பக்கா கிராமத்து பெண்

பக்கா கிராமத்து பெண்

அடித்தது ஜாக்பாட் போல விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் இப்படம் அனுகீர்த்தி வாஸுக்கு அறிமுகப் படமாக ஆனது. மிக விரைவிலேயே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கும் நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் பிகினியில் வலம் வந்த இவர் படப்பிடிப்பு தளத்தில் இழுத்துப் போர்த்திய சேலையுடன் பக்கா கிராமத்து பெண் போல அம்சமாக உள்ளார். கரும்பு தோட்டத்திற்கு நடுவே பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வர இயக்குனர்கள் மற்றும் சக சக கலைஞர்களுடன் அனுகிரீதி வாஸ் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவிட அதோடு ஒவ்வொருவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.பொதுவாகவே கிராமத்து கதை என்றால் பார்ப்பவர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது ,அதிலும் விஜய் சேதுபதி ஜோடி என்றால் கேட்கவா வேண்டும் ,செம்ம குஷியில் இருக்கிறார் என்பது புகைப்படத்தில் இருந்தே தெரிகிறது .

கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சி

கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சி

அதில் தெரிவித்துள்ளதாவது இதை விட சிறந்த அறிமுக திரைப்பட வாய்ப்பை கேட்கவே முடியாது. இயக்குனர் பொன்ராம் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக மட்டுமல்லாமல் ஆசிரியராகவும் எனக்கு இருந்துள்ளார். நீங்கள் எனக்கு மிகச்சிறந்த அறிமுகத்தை கொடுத்துள்ளீர்கள் அதை என்னால் வார்த்தைகளால் நன்றி என முடித்து விட முடியாது. நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே கிடையாது. உங்களுடன் பணியாற்றியது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மேலும் எனக்கு இந்த அறிய வாய்ப்பை அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி. விஜய் டிவி புகழ் உங்களுடன் மட்டும் இன்னும் புகைப்படம் எடுக்கவில்லை அடுத்தகட்ட படப்பிடிப்பில் நிச்சயம் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வோம். என செம ஜாலியாக படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகை அனுகீர்த்தி வாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த பதிவை பார்த்த அனைவரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X