இந்தா வந்தாச்சு... தளபதி 64-ல் இணைந்தார் விஜய்சேதுபதி
சென்னை: விஜய்யின், தளபதி 64 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய்சேதுபதி.
'மாநகரம்' மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்திலேயே கவனம் பெற்றார். அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார்.
இதில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

மாளவிகா மோகனன்
இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பேராசிரியர் விஜய்
இந்தப் படத்தில் பேராசியராக விஜய் நடிக்கிறார் என்றும் கல்வித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா என்று தெரியவில்லை. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

யாதும் ஊரே...
அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இதில் கலந்துகொள்ள முடியாமல் இருந்தார். இந்நிலையில் தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நேற்றுமுன் தினம் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தஞ்சாவூர் அருகே நடந்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஷெட்யூல் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

படப்பிடிப்பில்
இதையடுத்து அங்கிருந்து வந்த விஜய்சேதுபதி, தளபதி 64 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இப்போது இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











