Just In
- 4 min ago
ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் சுரபி.. கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கே!
- 5 min ago
புது வெள்ளை மழை கவர் சாங்… நக்ஷா சரணை பாராட்டிய வைரமுத்து !
- 3 hrs ago
கஸ்தூரிராஜா கடன் பெற்ற விவகாரம்...ரஜினி பெயரை கோர்த்து விட்ட போத்ரா
- 3 hrs ago
எக்ஸ்க்ளூசிவ்: லெஸ்பியனாக நடித்ததற்கு பெருமைப் படுகிறேன்.. நடிகை ரெஜினா கசாண்ட்ரா பளிச் பேட்டி!
Don't Miss!
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- News
பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் ஸ்டைலான விஜய் சேதுபதி... அது அந்தப் படத்து ஸ்டில் இல்லையாம்...பிறகு?
சென்னை: பெரிய மீசை, நீண்ட தலைமுடியுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. அது எந்த படத்தின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, உட்பட பலர் நடிக்கின்றனர்.
'தலைவி'யின் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா பரபரப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி... எப்போ ரிலீஸ் தெரியுமா?

கர்நாடக மாநிலம்
இதன் ஷூட்டிங், கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்து வந்தது. அங்கு விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

ரகசிய வீடியோ
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சியை, ரசிகர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டார். லாங் ஷாட்டில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், விஜய்சேதுபதியின் லுக் வெளியாகியுள்ளது.

படக்குழு அதிர்ச்சி
இந்த வீடியோ வைரலானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொங்கலுக்கு, விஜய் சேதுபதியின் லுக்கை வெளியே விட முடிவு செய்திருந்தனர். அதற்குள் அந்த லுக் வெளியானதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாஸ்டர் இல்லை
இந்நிலையில், இந்தப் படத்தின் லுக் என்று விஜய் சேதுபதி, பெரிய மீசை மற்றும் நீண்ட தலைமுடியுடன் இருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வந்தது. அது மாஸ்டர் படத்தின் ஸ்டில் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

டெஸ்ட் ஷூட்
அது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்துக்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் புகைப்படம். வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் இந்தப் படத்துக்காக, எந்தெந்த கெட்டப் வைத்தால் நன்றாக இருக்கும் என்று சில ஹேர்ஸ்டைலில் விஜய் சேதுபதியை, படக்குழு புகைப்படம் எடுத்துள்ளது. அந்த ஸ்டில்களில் ஒன்று அது என தெரியவந்துள்ளது.