எனக்கும் கொடுங்க நண்பா.. கன்னத்தில் முத்தம் கேட்ட விஜய்.. கட்டிப்பிடித்து கிஸ் அடித்த விஜய் சேதுபதி!
நடிகர் விஜய்க்கு மாஸ்டர் பட ஷூட்டிங் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்க்கு மாஸ்டர் பட ஷூட்டிங் தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தது பெரிய வைரலாகி உள்ளது.
கடந்த வாரம் நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது இதற்கு பின் பெரிய மத மாற்ற குழு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.

என்ன புகார்
இது தொடர்பாக இணையத்தில் அதிக அளவு வதந்திகள் பரவியது. நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோரை கிறிஸ்துவ மதத்துக்கு அவர் மாற்றிவிட்டனர். இதற்கான விழா கூட சமீபத்தில் வடபழனியில் நடந்தது என்றும் கூட இதில் பொய்யான தகவல்கள் பரவி வந்தது. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி மிகவும் காட்டமாக பதில் அளித்தார். ‘போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என்று கூறி இருந்தார்.

நட்பு
நடிகர் விஜய்யும் விஜய் சேதுபதியும் தற்போது ஒன்றாக நடித்து வருகிறார்கள். மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தம்
இந்த நிலையில் இவர், நேற்று முதல் நாள், இந்த படத்தின் செட்டில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாஸ்டர் படத்தின் கலை இயக்குனர் சதிஷ் குமார் நேற்று முதல்நாள் பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இதனால் மாஸ்டர் செட்டில் அவருக்கு பெரிய அளவில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அவருக்கு கேக் வெட்டி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் போல தன்னுடைய பாணியில் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

விஜய்
இதை அருகில் இருந் விஜய் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அதன்பின் எல்லோருக்கும் முன் விஜய் சேதுபதியிடம் சென்ற விஜய், எல்லோருக்கும் முத்தம் கொடுக்கிறீங்க, எனக்கு மட்டும் ஏன் தரல என்று கேட்டுள்ளார். பொதுவாக விஜய் சேதுபதி தனது ரசிகர்கள் தொடங்கி தன்னிடம் அன்பாக, நட்பாக பேசும் பல ஆண்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயும் அவரிடம் முத்தம் கேட்டுள்ளார்.

முத்தம் கொடுத்தார்
இதையடுத்து விஜய் சேதுபதி விஜய்க்கு அவர் கேட்டது போலவே முத்தம் கொடுத்தார். விஜய் கட்டிப்பிடித்து, அவரின் இரண்டு கன்னத்திலும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார். இதை அங்கிருந்த பலர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. கோலிவுட்டில் இரண்டு முக்கிய நடிகர்கள் இப்படி முத்தம் கொடுத்துக் கொண்டது இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இதனால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications