விஜய் தேவரகொண்டா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கியது !
ஹைதராபாத் : தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டிருக்கிறது. படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகள் மற்றும் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது.
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது .அதில் விஜய் தேவரகொண்டா ஒரு MMA குத்து சண்டை வீரராக நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெண் ரசிகர்கள்
நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா,குறிப்பிட்ட சில படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார். தற்போது டாப் ஐந்தில் ஒருவராக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.பல ரசிகர்களை கொண்டுள்ள இவருக்கு பெண் ரசிகர்களே அதிகம்.

வெற்றி படங்கள்
கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.இப்படங்களின் மூலம் ரஷ்மிகா மந்தன்னாவும் புகழின் உச்சிக்கே சென்று முன்னணி நடிகையாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தின் தெலுங்கு ரீமேகில் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிஸியான விஜய்
இப்போது இவர் நடித்து கொண்டு இருக்கும் படம் தான் LIGER ( saala Crossbreed) சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.இதில் குத்து சண்டை வீரராக நடிக்கும் இவர் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தது.தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கப்பட்டிருக்கிறது.

குத்துசண்டை
இந்த படப்பிடிப்பில் உலக நாடுகளை சேர்ந்த குத்து சண்டை வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடனான சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளிவந்து உள்ளது.இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளில் சிறப்பு பயிற்சி எடுத்து, இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.

பிரமாண்ட படமாக
பூரி கநெக்ட்ஸ் நிறுவனத்துடன், இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை பூரி கநெக்ட்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு விஷ்ணு சர்மா . தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











