சூட்டிங் ஸ்பாட்
சென்னையில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரான லாரா திடீரென விஜய்காந்தை படப்பிடிப்புத் தளத்தில் சென்று சந்தித்தார்.
விஜய்காந்த்- கிரண் நடிக்கும் தென்னவன் படப் பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.நேற்று இங்குசண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. டூப் போடாமல் விஜய்காந்தே ஸ்டண்ட் செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென லாரா அங்கு வந்தார். அவரை விஜய்காந்த் கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். சூட்டிங் பார்க்க விரும்புவாதகக் கூறிய லாராவுக்கு படப் பிடிப்புத் தளத்தை விஜய்காந்த் சுற்றிக்காட்டினார்.
பின்னர் விஜய்காந்த் தனது ஸ்டன்டைத் தொடர அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த லாரா பின்னர்விஜய்காந்தை வெகுவாகப் பாராட்டினார்.
இந்தப் படத்தில் விஜய்காந்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடமாம். கலெக்டராக, தேர்தல் அதிகாரியாக பல்வேறுரோல்களை செய்கிறாராம். கிட்டத்தட்ட சேஷன் மாதிரியான மிக கண்டிப்பான பாத்திரத்தில் விஜய்காந்த்நடிக்கிறார். அரசியல்வாதிகள், ஜாதிக் கட்சிக்காரர்களுடன் மோதல் படத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காதுஎன்கின்றனர்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் படம் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











