Thalapathy 69: மின்னல் வேகத்தில் விஜய்.. தளபதி 69 ஷூட்டிங் எப்போ முடியுதாம் தெரியுமா? செம அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய் சினிமாவை முழுவதுமாக தளபதி 69 படத்துடன் விடப்போவதாக அறிவித்துள்ளார் சமீபத்தில் நடைபெற்ற தவெக மாநாட்டில் 2026ம் ஆண்டு நிச்சயம் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடிப்பேன் என உறுதியாக பேசியுள்ளார். பத்தோடு பதினொன்றாக இருக்கவோ எக்ஸ்ட்ரா லக்கேஜாகவோ இருக்க அரசியலுக்குத் தான் வரவில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

விஜய் 2026ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினால் இனிமேல் அரசியல் வேண்டாம் என்றும் மீண்டும் நடிக்க வரவா என ரசிகர்களிடம் கேட்டு விட்டு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.

vijay thalapathy 69 pooja hegde 69

ஆனால், ஒரு முடிவெடுத்துவிட்டால் அதில் இருந்து விஜய் ஒருபோதும் பின் வாங்க மாட்டார் என்றும் எப்படியாவது அரசியலில் தான் நினைத்ததை சாதித்தே தீருவார் என்றும் கூறுகின்றனர். விஜய்யின் கடைசி படம் எனக் கூறப்படும் தளபதி 69 படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்கவும் முயற்சி செய்து வருகிறாராம்.

தளபதி 69 ஷூட்டிங் நிறைவு எப்போ?: வரும் நவம்பர் மாதத்துக்கு மேல் புதிய படங்களின் படப்பிடிப்புகளை நடத்தக் கூடாது என சினிமா சங்கங்கள் முடிவு செய்துள்ள நிலையில், முன்னதாகவே பூஜை போட்டு படத்தை ஆரம்பித்துள்ள விஜய் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே படப்பிடிப்பை முடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் பூஜா ஹெக்டே: எச். வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகிவரும் தளபதி 69 படத்தில் விஜய்க்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் இருந்து வரும் நிலையில், தவெக மாநாடு முடித்த கையோடு மீண்டும் படப்பிடிப்பை விஜய் தீபாவளி கழித்து தொடங்கவுள்ளதாக கூறுகின்றனர். அடுத்த 6 மாத காலத்திற்குள் எச். வினோத் இந்த படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம்.

நடைபயணம்: நடிகர் விஜய் அரசியல் தலைவராக மாறியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கலந்துக் கொண்டு போட்டியிட்டு வெற்றிப் பெறுவதற்கு ஏகப்பட்ட வியூகங்களை வி. சாலையில் நடைபெற்ற மாநாட்டில் வகுத்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஃப்ரீ ஆகிவிட்டு தொடர்ந்து 8 மாதங்கள் அடுத்த ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்திக்கப் போவதாகவும் மாபெரும் நடைபயணத்தை நடத்தப் போவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X