»   »  குறி தப்பாத விகாசினி!

குறி தப்பாத விகாசினி!

Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான பெயர்கள் வப்பதில் கோலிவுட்காரர்களுக்கு நிகர் அவங்கதான். குறி தப்பாது என்ற வித்தியாசமானபெயரில், விகாசினி என்ற வளப்பமான தேவதையை வைத்து கும்மாக ஒரு படம் தயாராகிறது.

ராஜ்கபூரிடம் உதவியாளராக இருந்த எஸ்.எஸ்.ராஜாதான் படத்தை இயக்கப் போகிறார். அது என்னங்க குறி தப்பாது என்று கேட்டால்,இப்படத்தின் நாயகன், நாயகி, வில்லன் ஆகியோருக்கு ஆளுக்கு ஒரு குறி, அதாவது இலக்கு.

அதை அடைய போராடுறாங்க, யார் ஜெயிக்கிறார், யார் தோற்கிறார் என்பதுதான் கதை. படத்தை முழுக்க முழுக்க மதுரையிலே தான் வச்சுஎடுக்கப் போறோம் (அண்ணனுக்கு சொந்த ஊரு அதுதேன்!)

டாக்கி போர்ஷனை மதுரை பக்கம் சுட்டு விட்டு, சாங்க் (பாட்டுத்தான்) மட்டும் ஃபாரின்ல பிடிக்கப் போறோம் என்றார் ராஜா.

படத்தின் நாயகி விகாசினி, படு பப்ளியாக இருக்கிறார். மூக்கும், முழியுமாக நல்ல கட்டுமஸ்தாக இருக்கிறார் இந்த நெட்டையழகி.

விகாசினிக்கு இது முதல் படம் இல்லை. என் காதலே என்ற படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி உழைத்துள்ளார். ராமமூர்த்தியின் தயாரிப்பில்உருவாகியுள்ள என் காதலே இன்னும் வெள்ளித் திரையைப் பார்க்க முடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறதாம்.

ரவிகணேஷுடன் அப்படத்தில் திறமை காட்டியுள்ளார் விகாசினி. முதல் படமே மூச்சடைத்துப் போய்க் கிடப்பதால் விசனத்துடன் இருந்தவிகாசினையைத் தேடி வந்தது குறி தப்பாது பட வாய்ப்பு.

விகாசினிக்கு பெரிய மனசு. கிளாமருக்கு கொஞ்சம் கூட தயக்கமே காட்டுவதில்லையாம். நினைத்தபடி வருகிறதா என்று மட்டும்தான்இயக்குநரிடம் கேட்பாராம், இல்லை என்று இழுத்தால் போதுமாம், இன்னும் போனஸாக பின்னிப் பெடலெடுத்து விடுகிறாராம்.

முதல் படம் சிக்கலாகிக் கிடப்பதால் தனது பெயரை பிரியா என்று மாற்றிக் கொண்டுவிட்டாராம். புதுப் பெயரில் தான் குறி தப்பாது படத்தில்நடிக்கிறார். நடிப்போடு, கிளாமருக்கும் (அதுக்குத்தான் மெயினே!) நல்ல வாய்ப்பாம். அசத்தக் காத்திருக்கிறார் விகாசினி.

ஹீரோவாக ஸ்ரீகாந்த் அறிமுகமாகிறார். தம்பிக்கு கேரளாதான் சொந்த ஊராம்.

குறி தப்பாம படம் எடுங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil