இரண்டாவது கட்ட சூட்டிங்கை முடித்த விக்ரம் படக்குழு... அப்டேட் சொன்ன டைரக்டர்
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வருகிறது விக்ரம் படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிவரும் படம் விக்ரம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறர். சிறப்பான வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது. அரசியல், பிக் பாஸ் உள்ளிட்ட தளங்களில் பிசியாக இருந்தாலும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் கமல்.

பிசியான கமல்ஹாசன்
கமல் அரசியல் தலைவராக தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். தினந்தோறும் ட்விட்டர் பக்கத்திலும் தனது அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில், கவுண்டவுன் மற்றும் ப்ரமோக்களிலும் பிசியாக காணப்படுகிறார்.

உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கமலை மீண்டும் படத்தில் காண ஆவலுடன் காணப்படுகின்றனர்.

2வது கட்ட படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கமலுடன் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கமலின் வித்தியாசமான நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











