இறுதிகட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் விக்ரம்.. புதிய தகவல்!

சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்

கமல்ஹாசனுடன் இணைந்து இந்தப் படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில், நரேன் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்

இந்திய அளவில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உள்ள நிலையில் இப்போது விக்ரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஆக்ஷன் படங்களை

ஆக்ஷன் படங்களை

கமர்ஷியல் சினிமாக்களில் இருந்து சற்று விலகி தனக்கான தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு இயக்கும் ஒவ்வொரு படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைகளை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ் மாநகரம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது மாநகரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

விஜய்யை வித்தியாசமான கதாபாத்திரத்தில்

விஜய்யை வித்தியாசமான கதாபாத்திரத்தில்

கைதி வெற்றி லோகேஷை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஆக உயர்த்தியது. இந்த நிலையில் விஜய் உடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி ப்ரொஃபசராக நடித்திருப்பார். வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் போலவே மாஸ்டர் படத்தில் ஆக்ஷனுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் வெளுத்து கட்டியிருப்பார்.

கமல்ஹாசனின் விக்ரம்

கமல்ஹாசனின் விக்ரம்

இந்நிலையில் அடுத்ததாக தனது கலையுலக குருவான கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட விக்ரம் படப்பிடிப்பு கொரோனா காரணமாக சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து இப்பொழுது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. வழக்கமான லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் கமல்ஹாசனின் அபார நடிப்பு என இரண்டும் ஒன்று சேர்ந்து உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்பு

இறுதிகட்ட படப்பிடிப்பு

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் நரேன் என முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். விக்ரம் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி இணையதளத்தில் கலங்கிய நிலையில் படப்பிடிப்பு இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் விக்ரம் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது. அதையடுத்து தயாரிப்பு பணிகள் மிக விரைவிலேயே தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X