»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

செக்ஸ் அப்பீல் என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று பிரபல பாலிவுட் டைரக்டர் சுபாஷ் கய்யிடம் கேட்ட போது, அவர் சொன்ன சிறிய விளக்கம்:

செக்ஸ் அப்பீல் என்றால் 36-24-36 அளவில் மட்டுமே கிடையாது. ஒரு இளம் பெண்ணின் பர்சனாலிட்டிதான் முக்கியம். பெரிய கண்கள், அழகான சிரிப்பு,எடுப்பான தோற்றம் இவற்றைப் பொறுத்தது அழகு.

ஒரு முறை பார்த்த ஒரு பெண்ணை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டும் விதத்தில் உள்ள ஒரு வித கவர்ச்சியைத்தான் செக்ஸ் அப்பீல் என்கிறோம்.

நடிகைகளில் இப்போது பிரபலமாக உள்ள ஐஸ்வர்யா ராய் கவர்ச்சிகரமானவர். பார்த்த மாத்திரத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி விடக் கூடியவர்.

செக்ஸ் அப்பீலுக்கு சரியான உதாரணம் ஐஸ்வர்யா ராய்தான். கண், மூக்கு, உதடுகள் இருக்க வேண்டிய இடத்தில் அழகாக அமைந்துள்ளன. இவரிடம் அழகுமட்டுமல்ல, இந்தியப் பெண்களுக்கே உரிய எழில் அமைந்துள்ளது.

கண்கள் செக்ஸியானவை. இவர் பியார் ஹோகையா படத்தில் ஒரு காட்சியில் படுக்கையில் இருந்து எழுந்து திரைச் சீலைகளை இழுப்பார். பின்னர் போனைஎடுத்து, சோம்பேறித்தனமாக நகர்ந்து செல்வார். இந்தக் காட்சியை பார்த்து நான் மயங்கி விட்டேன்.

என் சினிமா அனுபவத்தில் என்னை சொக்க வைத்தது இந்தக் காட்சி. இப்படி மனம் திறந்து சொல்லிக் கொண்டே போகிறார் டைரக்டர் சுபாஷ் கய்.

Read more about: cinema, interview, vicraman

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil