»   »  புரட்சி நாயகி விந்தியா

புரட்சி நாயகி விந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கமம் மாதிரியான குடும்பப் பாங்கான ரோல்களில் நடித்து, பின்னர் வி.சேகர் டைப் நாடக பாணி படங்களில் கூட்டத்தில்ஒருவராக வந்து போய், அதைத் தொடர்ந்து மும்தாஜ் லெவலுக்கு முக்கால் உடம்பைக் காட்டி ஆட்டம் போட்ட விந்தியாஇப்போது ஆக்ஷன் ரோலுக்கு வந்துவிட்டார்.

இப்போது அழகு நிலையம் என்ற படத்தில் நடிக்கும் விந்தியாவுக்கு அதில் மிக ஆவேசமான பெண் வேடமாம். ஆண்களால்ஏமாற்றப்பட்ட ஒரு பெண் சுனாமியாய் பொங்கி எழுந்து அந்த ஆண்களுக்கு பொங்கல் வைக்கும் கதையாம்.

படத்தில் முதல் பாதியில் விந்தியாவின் அதீத கவர்ச்சி உண்டாம். அடுத்த பாதியில் விந்தியாவின் வீரம் வெளியாகிறதாம்.

வழக்கமாக விஜய்சாந்தி நடிக்கும் தெலுங்கு கரம் மசாலா டைப் ரோல் இது என்பதால், சண்டைப் பயிற்சி எல்லாம் செய்துதன்னை கிட்டத்தட்ட விஜய்சாந்தியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார் விந்தியா.


கெமிஸ்ட்ரி லேப் டெக்னீசியன் மாதிரி ஆவேசத்தையும் கவர்ச்சியையும் சரி விகித்தில் கலந்து நடித்து வரும் விந்தியா இந்தப்படத்தின் டைட்டிலில் தனது பெயருக்கு முன் புரட்சி நாயகி என்று போடச் சொல்லியிருக்கிறாராம்.

விஜய்காந்த் தொடங்கும் கட்சியில் சேரவும் அதில் மகளிர் அணிப் பதவி எதையாவது பிடிக்கவும் விந்தியா முயற்சி செய்துவருவதாக ஒரு பக்கம் பேசப்படும் நிலையில், இந்த புரட்சி நாயகி பட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

புரட்சி நாயகியா? ஏதாவது சிக்கல் வருமே என்று முதலில் படத்தின் இயக்குனர் ராஜாஜி யோசித்தாராம். ஆனால், விந்தியாமீண்டும் மீண்டும் வலியுறுத்தியதால் டைட்டிலில் விந்தியாவுக்கு பட்டம் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்.

விந்தியாவுக்கு இதில் சண்டைக் காட்சி எல்லாம் உண்டாம். இந்தப் படம் குறித்து விந்தியா கூறுகையில்,


இனி நான் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிக்கப் போகிறேன். படத்தில் கவர்ச்சி கட்டாயம் இருந்தாலும் ஆபாசம் இருக்காது(ரெண்டுக்கும் ஒரு 6 வித்தியாசம் சொல்லுங்க மேடம்). விஜய்சாந்தி சினிமாவில் சாதித்துவிட்டு அரசியலுக்கு வந்தார்.

நான் சினிமாவிலேயே சாதிக்கவில்லை. ஆனால், நிச்சயம் சாதிப்பேன். அதன் பின்னர் அரசியலில் நுழைவது பற்றி யோசிப்பேன்.

இப்போது உடனடியாக அரசியலுக்குப் போகும் திட்டமே என்னிடம் இல்லை என்றார் விந்தியா.

இந்தப் படத்துக்கு விந்தியாவின் கவர்ச்சி எந்த அளவுக்கு துணை புரியும் என்பது தெரியாததால் இன்னொரு ஹீரோயினும்இருக்கிறார். புதுமுகமான அவரும் கிளாமர் விஷயத்தில் இயக்குனருக்கு நிறையவே உத்தரவாதம் தந்திருக்கிறாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil