»   »  வினு சக்ரவர்த்தியை அடித்த ஹீரோ!

வினு சக்ரவர்த்தியை அடித்த ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

மூத்த நடிகர் வினு சக்ரவர்த்திக்கும், நண்பனின் காதலி பட நாயகன் விக்கிரமாதித்யாவுக்கும் இடையே ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜமாகவே நடந்தகடும் சண்டையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூத்த நடிகரான வினு சக்ரவர்த்தி நண்பனின் காதலி என்ற படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில் குணால்,விசில் பட நாயகன் விக்கிரமாதித்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் ஷிவானி சிங், நிரோஷா ஆகியோரும் படத்தில் உள்ளனர். கிச்சா படத்தை இயக்கி வருகிறார். வினுவின் மகளாக ஷிவானியும்,மனைவியாக நிரோஷாவும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடந்தது. காட்சிப்படி, ஷிவானியை, விக்கிரமாதித்யாகாதலிக்கிறார். இதற்காக அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறுகிறார்.

அவரது வீட்டையேப் பார்த்தபடி இருக்கிறார். அவரைப் பார்த்து குழம்பும் வினு, இவன் நமது பெண்ணைக் காதலிக்கிறானா அல்லது மனைவியைசைட் அடிக்கிறானா என்று குழம்புகிறார்.

ஒரு நாள் கையும் களவுமாக விக்கிராமாதித்யாவைப் பிடிக்கிறார். அப்போது அவரை திட்டுகிறார். பதிலுக்கு விக்கிரமாதித்யாவும் வினுவிடம்வாக்குவாதம் புரிகிறார். இது முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. இதுதான் காட்சி.

இந்தக் காட்சியை படமாக்கியபோது விக்கிரமாதித்யா, வினுவை நிஜமாகவே அடித்து விட்டார். இதனால் டென்ஷன் ஆன வினு சக்ரவர்த்தியும்பதிலுக்கு விக்கிரமாதித்யாவை அடித்தார். இருவரும் படார் படாரென்று பலமாக அடித்துக் கொண்டனர்.

வினு சக்ரவர்த்தி ஆக்ரோஷமாகி விக்கிரமாதித்யாவை சரமாரியாக அடித்து அவருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார். இந்த நிஜ சண்டையால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் கிச்சா உள்ளிட்டோர் பாய்ந்து சென்று இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டனர். அப்படியும் வினு சக்ரவர்த்தி ஆத்திரம் குறையாமல்உறுமியபடி இருந்தார்.

பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்திய கிச்சா, இருவரையும் சமாதானப்படுத்தி கை குலுக்கவைத்தார். அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிஜ சண்டை குறித்து வினு சக்ரவர்த்தி கூறுகையில், தம்பி, நான் 30 வருஷமாக நடிக்கிறேன். 62 வயதாகிறது. இதுவரைக்கும் நான்யாருடனும் சண்டை போட்டதில்லை, எந்தக் கெட்ட பெயரையும் சம்பாதிக்கவில்லை.

விக்கிரமாதித்யா சின்னப் பையன். ஷூட்டிங்கின்போது ஹீரோயின் ஷிவானி சிங், நிரோஷா, அப்புறம் ஷூட்டிங்கைப் பார்க்க நிறையப் பெண்கள்திரண்டிருந்ததால் உணர்ச்சி வசப்பட்டு விட்டான்.

தனது ஹீரோத்தனைத்தைக் காட்டுவதற்காக என்னை நிஜமாகவே அடித்து விட்டான். எனக்கும் கோபம் வந்து விட்டது. நானும் அவனைசரமாரியாக அடித்து விட்டேன்.

ஒத்திகை பார்த்தபோதே அவன் எனது முகத்தில் குத்தி விட்டான். அப்பவே நான் சொன்னேன், இதோ போர் உனக்கு கராத்தே தெரிந்திருக்கலாம்.ஆனால் நான் மதுரைக்காரன், எல்லா வீர விளையாட்டுக்களும் அத்துப்படி, என் கிட்டேவச்சுக்காதே என்று எச்சரித்தேன்.

ஆனால் கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்குத் தலைகால் பு>யவில்லை, அடித்து விட்டான். அப்புறம் சமாதானமாகி விட்டது என்று விவரித்தார்வினு சக்ரவர்த்தி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil