நெல்லையில் 'விருந்தாளி' ஷூட்டிங்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, குற்றாலம, செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோபிகா இன்டர்ஷேனல் நிறுவனத்தின் சார்பில் விருந்தாளி எனும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மைக்கேல் கதாநாயகனாகவும், 'அவள் பெயர் தமிழரசி' படத்தில் நடித்த தியானா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள்.
மேலும் கஞ்சா கருப்பு, நாசர், பாலாசிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை கேரளாவின் புகழ்பெற்ற லோகிதாஸிடம் இயக்குநராகப் பணியாற்றிய உதயசங்கர் இயக்குகிறார்... வாட்டர்மேன் என்ற பெயரில்.
அஞ்சாதே படத்துக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த ஆக்சன் பிரகாஷ் இதிலும் பணியாற்றுகிறார். பூ படத்தில் இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன், இசையமைக்கிறார். நா.முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார். இப்படத்தினை என்ஆர்ஐ ராஜேஷ் கோபிகா தயாரிக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க கிராமத்தில் வசிக்கும் நடுந்தர குடும்பத்தின் காதல் கதையாம். மொத்தம் 55 நாட்கள் இடைவிடாது இம்மாவட்டதிலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்து மே மாதம் திரைக்கு கொண்டு வரவுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை தேரடி தெருவில் காவல் துறை அனுமதி பெறாமலேயே படப்பிடிப்பு குழுவினர் முகாமிட்டனர். மேலும் நேற்று காலை முதல் மாலை வரை அப்பகுதியில் சண்டை காட்சி படமாக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அதை தொடர்ந்து உள்ளூர் காவல்துறையின் அனுமதியோடு 8 போலீசாரை காவலுக்கு அழைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.


Click it and Unblock the Notifications











