ஷூட்டிங்கில் விஷால் படுகாயம்-ப்ரியாமணி தப்பினார்
மலைக்கோட்டை படப்பிடிப்பின்போது வில்லன் நடிகர்கள் துரத்தி வந்த ஆட்டோ மோதியதில், மோட்டார் சைக்கிளில் பிரியா மணியுடன் சென்ற நடிகர் விஷால் காயமடைந்தார்.
விஷால், பிரியா மணி நடிக்கும் புதிய படம் மலைக்கோட்டை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நகரில் நடந்தது. இதில் விஷாலும், பிரியாமணியும் மோட்டார் சைக்கிளில் செல்ல, அவர்களை வில்லன் கும்பல் ஆட்ேடாக்களில் துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.பிரியா மணியை பில்லியனில் அமர வைத்துக் கொண்டு விஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார். வில்லன் கும்பல் ஆட்ேடாக்களில் துரத்தினர்.
அப்ேபாது ஒரு ஆட்டோ விஷால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷால் கீழே விழுந்தார். அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விஷாலைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
வலது முழங்காலில் மட்டும் சிராய்ப்புக் காயம் இருந்தது. வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை எடுத்துக் கொண்ட விஷால் பின்னர் ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார். பிரியா மணி காயமின்றி தப்பினார்.


Click it and Unblock the Notifications











