சாய் பாபா கோயிலில் கோலாகலமாக நடந்த விஷாலின் 32வது பட பூஜை.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாக உள்ள 31வது படத்தின் பூஜை இன்று சாய் பாபா கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா இணைந்துள்ளார். பட பூஜை போட்டோக்களை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

44வது பிறந்தநாள்
நடிகர் விஷால் தனது 44வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி எளிமையான முறையில் கொண்டாடினார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு வழங்கி கொண்டாடினார். இந்நிலையில், தனது அடுத்த அடுத்த படங்களின் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

ஆர்யாவுடன் இணைந்து
நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீசாக ரெடியாகி வருகின்றன. இருமுகன் படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படம் இந்த ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமே வாகை சூடும்
ஷார்ட் பிலிம்களை இயக்கி பிரபலமான இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் அடுத்ததாக விஷால் நடிக்கும் படத்திற்கு வீரமே வாகை சூடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சண்டக்கோழி படத்தில் பார்த்தது போல அதே கம்பீரத்துடன் விஷால் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பிறந்தநாள் பரிசாக ரிலீசானது.

32வது பட பூஜை
இந்நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள அவரின் 32வது படத்தின் பூஜையும் போடப்பட்டு அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விஷாலின் நண்பர்கள் மற்றும் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து RaNa தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பான் இந்திய படமாக இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

சுனைனா தான் ஜோடி
சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். அந்த படத்தில், தன்னுடைய காதல் கதையை திரிஷாவுக்கு பாடல் மூலம் விஷால் சொல்லும் போது நடிகை சுனைனா அந்த பாடலில் நடித்திருப்பார். இந்நிலையில், அதன் பிறகு பிரம்மாண்டமாக உருவாகும் விஷாலின் 32வது படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார் சுனைனா.

சாய் பாபா கோயிலில்
சாய் பாபா கோயிலில் கோலாகலமாக விசேஷ பூஜையுடன் விஷாலின் 32வது பட பூஜை தொடங்கி இருக்கிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. விஷால், நடிகை சுனைனா, ரமணா, இயக்குநர் வினோத் மற்றும் படக்குழுவினர் பலர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பான் இந்தியா படம்
சமீபத்தில் இந்த பான் இந்தியா பட டிரெண்ட் வைரலாகி வருகிறது. நடிகர்கள் மற்ற மொழிகளிலும் தங்கள் மார்க்கெட்டை உயர்த்தி வசூலை பெருக்க இந்த வழியை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள இந்த படமும் பான் இந்தியா படம் தானாம்.

என்ன டைட்டில்
அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ள ஒரு பொருள் தான் படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரது வாழ்க்கையும் புரட்டிப் போட்ட ஒரு பொருள் என்றால் அது "ஸ்மார்ட் போன்" அல்லது "செல்போன்" தானே அதுதான் டைட்டிலா? மறுபடியும் இரும்புத்திரை, சக்ரா போன்று டெக்னாலஜி படமாக இந்த படமும் உருவாக போகிறதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











