சண்டைக் காட்சியில் விபத்து - விஷாலுக்கு தலையில் பலத்த காயம்!

By Shankar

Vishal in Shooting Spot
சென்னை: சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகர் விஷாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மதகஜ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கினார் இயக்குனர். வில்லன்களுடன் விஷால் ஆக்ரோஷமாக மோதுவது போல் இக்காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது விஷால் தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் விஷாலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து விஷால் குடும்பத்தினரை பெரும் கவலை கொள்ள வைத்து விட்டது.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர் விஷாலுக்கு பயப்படும் படி எதுவும் இல்லை நன்றாக இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

விஷால் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X