ஓங்கி அடித்த விஷால்.. தகரத்தில் கை பட்டு சதை கிழிந்தது!
சென்னை: படப்பிடிப்பின்போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுகையில் தையல் போட்டனர். தற்போது விஷால் ஓய்வில் இருக்கிறார்.
சண்டைக் காட்சியின்போது இந்த சம்பவம் நடந்தது. ஸ்டண்ட் நடிகரை அடிக்கும் காட்சியைப் படமாக்கியபோது சம்பந்தப்பட்ட ஸ்டண்ட் நடிகர் எதிர்பாராதவிதமாக விலகி விட்டதால் விஷால் கையில் அடிபட்டு விட்டது.
விஷாலின் கை தகரத்தில் வேகமாக அடித்ததால் சதை கிழிந்து போய் விட்டது.

பூஜை...
ஹரி இயக்கும் புதிய படம் பூஜை. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார்.

மோகன் ஸ்டுடியோவில்...
இப்படத்தின் ஷூட்டிங் மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போட்டு நடந்து வருகிறது.

ஃபைட் சீன்
தற்போது அங்கு சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகின்றனர். கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர்.

ஓங்கி அடிக்கும் காட்சி
காட்சிப்படி விஷால், ஒரு சண்டை நடிகரை தனது வலது கையினால் ஓங்கி அடிக்க வேண்டுமாம். இந்தக் காட்சியை படமாக்கியபோது திடீரென சண்டை நடிகர் விலகி விட்டார்.

தகரத்தில் பட்டு கிழிந்த சதை
இதனால் அருகில் இருந்த தகரத்தில் விஷாலின் கை வேகமாக மோதியது. இதில் அவரது கை சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

14 தையல்
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கையில் 14 தையல்கள் போட்டனர். பின்னர் வீடு திரும்பினார். தற்போது ஓய்வில் இருக்கிறார்.
அவர் சரியான பின்னர்தான் பூஜை படப்பிடிப்பு தொடருமாம்.


Click it and Unblock the Notifications











