»   »  விஷால் - லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2... பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது!

விஷால் - லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2... பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷால் நடிப்பில் இயக்கு​​நர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இத்திரைப்படத்தை இன்று திரையிட்டாலும் தியேட்டர்கள் களை கட்டும். தொலைக்கட்சிலும் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர், பல தடங்கல்களுக்குப் பிறகு.

Vishal - Lingusamy's Sandakozhi 2 launched today

சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப்பு ஆரம்பமானது.

இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ். தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக உருவாகும் இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இருவரும் பங்கேற்ற பாடல் காட்சி படப்பிடிப்புடன் இன்று தொடங்கியது சண்டகோழி 2. படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு சக்தி, தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி (விஷால்).

English summary
Vishal - Lingusamy's Sandakozhi 2 has launched with a song shoot today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil