இந்த வாட்டியாவது நம்பலாமா சிவா? #Viswasam
சென்னை: விசுவாசம் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது என்று கூறப்படுகிறது.
2018ம் ஆண்டு பிறந்ததில் இருந்து இந்த மாதம் விசுவாசம் படப்பிடிப்பு துவங்கும் என்று மாதாமாதம் கூறப்படுகிறது. இந்நிலையில் மே மாதம் 4ம் தேதி படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சிவா, அஜீத் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் படம் தான் விசுவாசம். சினிமா ஸ்டிரைக் முடிந்த நிலையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.
முதலில் ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பை துவங்க உள்ளார்களாம். அதன் பிறகு படக்குழு மும்பைக்கு செல்கிறது. படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் இந்த தீபாவளி தல தீபாவளி கிடையாது.
சிவா ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று நினைத்து ட்விட்டர் பக்கம் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. புத்தாண்டு பிறந்ததில் இருந்து சிவா ட்விட்டர் பக்கமே வரவில்லை.


Click it and Unblock the Notifications











