»   »  2.ஓ அப்டேட்... 'சிட்டி' தலைமையில் பிரமாண்ட போர்க் காட்சி!

2.ஓ அப்டேட்... 'சிட்டி' தலைமையில் பிரமாண்ட போர்க் காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்தின் அடுத்த மெகா ரிலீசான 2.ஓவின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த க்ளைமாக்ஸில் ரஜினி பங்கேற்கும் காட்சிகளை கடந்த மே மாதமே எடுத்துவிட்டார் ஷங்கர்.

Select City
Buy Aithe 2.0 (A) Tickets

இப்போது மனிதர்களுடன் ரோபோக்கள் மோதும் பிரமாண்ட போர்க் காட்சியை படமாக்கி வருகிறார் ஷங்கர்.


War sequence in Rajini's 2.O

இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் மைதானத்தில் ஏகப்பட்ட பீரங்கி வண்டிகளை நிறுத்தியிருந்ததை அந்தப் பகுதிவாசிகள் வியப்போடு பார்த்துச் சென்றனர்.


இந்தக் காட்சிப்படி சிட்டி ரஜினி தலைமையில் ஏகப்பட்ட ரோபோக்கள், பீரங்கி வண்டிகளை துவம்சம் செய்கின்றன. இதற்காக வெடிக்கப்பட்ட டம்மி பீரங்கி குண்டுகள் அந்தப் பகுதி மக்களை கொஞ்சம் மிரட்டிவிட்டதென்னவோ உண்மை.


எந்திரன் க்ளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சியில் ரஜினி வடிவிலிருந்த ரோபோக்கள் ஏகப்பட்ட அவதாரமெடுத்து மிரள வைக்கும். அந்தக் காட்சியை ஷங்கரே டிசைன் செய்திருப்பார்.


2.ஓவில் அதைவிட வித்தியாசமாக இந்த சண்டைக் காட்சியை எடுத்து வருகிறார் ஷங்கர். இதையும் அவர்தான் டிசைன் செய்துள்ளார்.


செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து ரஜினியும் ஷூட்டிங்குக்கு திரும்புகிறார்.

English summary
Shankar's '2.O' will have a grand war sequence with hundreds of military tanks and giant robots, which is said to be the stunning climax in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil