இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா... புதிய தகவல்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
காஜல் அகர்வால்,ப்ரியா பவானி சங்கர்,டெல்லி கணேஷ்,என பலர் இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்க இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகிறது என கூறப்பட்டது.
இதற்கிடையில் லைகா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பூசல் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற குழப்பத்தில் இருக்க இப்பொழுது இந்தப் பிரச்சினை தீர்வுக்கு வந்து படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம்
இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என கூறப்படும் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பல்வேறு வசூல் சாதனைகளை செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் யாரும் தொடாத உயரத்தை ஷங்கர் தொட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஜினிகாந்த் நடிப்பில் 2. O வெளியாகி பெரும் வசூலை வசூலித்தது.

ஆரம்ப கட்ட படப்பிடிப்பு
2.O- வை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். ஆரம்ப கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படம் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியது எனக் கூறப்படும் நிலையில் இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என 3 கதாநாயகிகள் நடிக்க டெல்லி கணேஷ்,மனோ பாலா, சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் விவேக் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர் .

பிரச்சினை பூதாகரமாக
கொரோனா சூழல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது மேலும் கமல்ஹாசனின் அரசியல் பிரச்சாரம் காரணமாகவும் படப்பிடிப்பு சற்றும் தாமதம் செய்யப்பட்டது. இதற்கிடையில் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தையும் , அந்நியன் இந்தி ரீமேக்கையும் இயக்க தயாராகி வந்தார். இதனால் லைகா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே சிறு பூசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று பிரச்சினை பூதாகரமாக உருவானது.

வழக்குகள் வாபஸ்
லைகா நிறுவனம் மற்றும் ஷங்கர் தரப்பு வழக்கு மேல் வழக்குகளை சந்தித்து. சமீபத்தில் லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் இந்தியா வந்திருந்தபோது ஷங்கரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக பேசி முடித்து விட்டதாகவும். இந்தியன் 2 படம் தொடர்பாக ஷங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

அடுத்த வருடம் பிப்ரவரியில்
இருப்பினும் கமல்ஹாசன் இப்பொழுது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. இதனால் ஷங்கரும் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் பிப்ரவரியில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











