twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மயிரிழையில் உயிர் தப்பிய நிவின் பாலி: பதறிய படக்குழு

    By Siva
    |

    Recommended Video

    ஷூட்டிகில் நடந்த அசம்பாவிதத்திலிருந்து உயிர் தப்பிய நிவின் பாலி- வீடியோ

    திருவனந்தபுரம்: காயம்குளம் கொச்சுன்னி படத்தில் நடித்த போது நிவின் பாலி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

    ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் காயம்குளம் கொச்சுன்னி. இந்த படத்தில் இருந்து அமலா பால் விலகியதால் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு சுமார் 160 நாட்கள் நடைபெற்றது.

    வெளிநாடு

    வெளிநாடு

    இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படப்பிடிப்பின்போது நிவின் பாலி காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் பேட்டி அளித்துள்ளார்.

    முதலைகள்

    முதலைகள்

    சில காட்சிகளை படமாக்க இலங்கை சென்றோம். அங்குள்ள ஒரு ஏரியில் குதித்து நிவின் பாலி நீந்தி வர வேண்டும். ஏரி பகுதிக்கு சென்ற பிறகு தான் அங்கு சுமார் 300 முதலைகள் இருப்பது தெரிய வந்தது. சப்தம் போட்டு முதலைகளை விரட்டி விட ஒரு குழு அமைக்கப்பட்டது. விரட்டப்பட்டும் 3 முதல் 4 முதலைகள் செல்லாமல் அங்கிருந்தன. நல்ல வேளையாக அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்கிறார் ரோஷன்.

    நிவின்

    நிவின்

    சண்டை காட்சிகளில் நடித்தபோது நிவின் பாலி கை உடைந்தது. இருப்பினும் மறுநாளே படப்பிடிப்புக்கு வரத் தயாராகிவிட்டார். அவரின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போனோம். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து ஒரு மாட்டு வண்டி நிவின் பாலி மீது விழுந்தது. அப்போது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்று ரோஷன் தெரிவித்துள்ளார்.

    மோகன்லால்

    மோகன்லால்

    காயம்குளம் கொச்சுன்னி படத்தில் மோகன்லால் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் மிக பிரமாண்ட படமாக இது உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் போஸ்ட் ஃப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kayamkulam Kochunni director Roshan Andrews said in an interview that Nivin Pauly had a narrow escape when a bullock cart fell over him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X