நடுரோட்டில் சண்டை போட்ட சசிகுமார்: போலீசில் புகார் அளித்த மக்கள்

By Siva

மும்பை: புதுப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு ஷூட்டிங்கின்போது மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.

சலீம் படம் புகழ் நிர்மல் குமார் சசிகுமார், சரத்குமார் உள்ளிட்டோரை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்கியுள்ளனர்.

When people complained about Sasikumar to Mumbai police

நிர்மல் குமார் கூறியதுபடி சசிகுமார் கெட்டவர்களை நடுரோட்டில் துரத்தி, துரத்தி அடித்து துவைத்துள்ளார். அதை பார்த்த பொது மக்கள் ஷூட்டிங் என்று தெரியாமல் யாரோ ஒரு ஆள் பலரை அடிக்கிறார் என்று மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் சசிகுமாரை அடையாளம் கண்டு அவரை சுற்றி வளைத்தனர். பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை பலரும் சசிகுமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

When people complained about Sasikumar to Mumbai police

தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டதில் சசிகுமாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கோபப்படாமல், முகம் சுளிக்காமல் பொறுமையாக ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். சலீம் படத்தை போன்றே இதுவும் ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியும், இன்ப அதிர்ச்சியும் கிடைக்கும் என்று சசிகுமார் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சசிகுமார் தனது நண்பர் சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விளையாட்டு மற்றும் அரசியல் த்ரில்லராக உருவாகி வரும் கென்னடி கிளப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சசிகுமார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும்படி அமைந்திருந்தது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங்கும் மும்பையில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தர்பார் படப்பிடிப்பு தளத்தில் முருகதாஸ் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் வீடியோ ஒன்று மீண்டும் கசிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X