»   »  ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் விபத்து... பெண் உதவி இயக்குநர் படுகாயம்!

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பில் விபத்து... பெண் உதவி இயக்குநர் படுகாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் பெண் உதவி இயக்குநர் படுகாயம் அடைந்தார்.

ஐஸ்வர்யா ராய் நடிக்கும் புதிய இந்திப் படம், 'பன்னேய் கான்'. அனில் கபூர், ராஜ்குமார் ராவ் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் அதுல் மஞ்சுரேக்கர் இயக்குகிறார்.

Woman Asst Director injured at Aishwarya Rai movie shoot

இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள புளோரா பவுண்டெய்ன் என்ற இடத்தில் நேற்று நடந்தது. ஐஸ்வர்யா ராய் ஒரு வாடகை காரை அழைப்பது போல காட்சி. இந்தக் காட்சியை தூரத்தில் இருந்து படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று, பெண் உதவி இயக்குநர் ஒருவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

இதுபற்றிப் படக்குழு, 'ஷூட்டிங் நடந்த போது, அந்த உதவி இயக்குனர் காதில் ஹெட் போன் மாட்டியிருந்ததால் பைக் சத்தம் கேட்கவில்லை. இதனால் விபத்து ஏற்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளார்,' என்று தெரிவித்துள்ளது.

English summary
A woman asst director has got injured at Aishwarya Rai's hindi movie shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil