'யாதும் ஊரே...'க்காக பழமையான சர்ச்சில் விஜய் சேதுபதி ஷூட்டிங்
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்துக்காக, கும்பகோணம் அருகே பழமையான சர்ச்சில் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
விஜய் சேதுபதி, மேகா காஷ் நடிக்கும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி, ரகு ஆதித்யா நடிக்கின்றனர். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர்

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர்.
படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.
இதன் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள பழமையான சர்ச்சில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











