ராவணனாக மாறிய கேஜிஎஃப் ஹீரோ.. மேட் மேக்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர் அங்க என்ன பண்றாரு.. கூஸ்பம்ப்ஸ்!

மும்பை: இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக ராமாயணா திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகின்றன. கேஜிஎஃப் படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறிய கன்னட நடிகர் யஷ் இந்த படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். கன்னடத்தில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

ராமாயணா படத்தில் யஷ் மிகப்பெரிய போர்க் காட்சிகளில் நடிக்கவுள்ள நிலையில், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டண்ட் மேஸ்ட்ரோவான கை நோரிஸ் (Maestro Guy Norris) இந்த படத்தில் யஷ் நடித்து வரும் சண்டைக் காட்சிகளை உருவாக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.

Yash joins hands with Mad Max Stunt Maestro Guy Norris for Ramayana epic battle scene

மேட் மேக்ஸ் படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றிய மேஸ்ட்ரோ கை நோரிஸ் உடன் யஷ் இணைந்து பணியாற்றி வருவதை பார்த்த அவரது ரசிகர்கள் இதுதான் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

டிரெண்டிங்கில் ராமாயணா: #Ramayana ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே நடிகர் யஷ் மற்றும் மேட் மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் மேஸ்ட்ரோ கை நோரிஸ் இருவரும் இணைந்து பணியாற்றும் வொர்க்கிங் ஸ்டில் புகைப்படங்கள் வெளியானது தான். நித்திஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராவணனாக கன்னட திரையுலகின் வசூல் மன்னனே நடித்து வரும் நிலையில், அவரது படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானால் ரசிகர்கள் கொண்டாடமல் இருப்பார்களா என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

தங்கல் பட இயக்குநர்: சல்மான் கான் தயாரிப்பில் 2011ம் ஆண்டு வெளியான சில்லர் பார்ட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் நித்திஷ் திவாரி. முதல் படத்திலேயே தேசிய விருதுகளை குவித்தார். அதன் பின்னர், அமீர்கான் உடன் இணைந்து அவர் இயக்கிய தங்கல் திரைப்படம் இதுவரை எந்தவொரு இந்திய படங்களும் எட்ட முடியாத அளவுக்கு 2000 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலுடன் புஷ்பா 2 படத்துக்குப் பிறகும் முதலிடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணா படம் ராஜமெளலி படங்களுக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yash joins hands with Mad Max Stunt Maestro Guy Norris for Ramayana epic battle scene

யஷ் லுக்கே மிரட்டுதே: கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோருடன் இணைந்து யஷ் நடித்து வரும் டாக்ஸிக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ராமாயணா படத்தின் முதல் பாகமும் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு 2ம் பாகமும் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் படத்தை வேகமாக எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ராவணனாக நடித்து வரும் யஷ் லுக்கே மிரட்டலாக உள்ளதே என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். ஏற்கனவே ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் காட்சிகளின் படங்கள் லீக்கான நிலையில், தற்போது இந்த போட்டோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்: 1981ம் ஆண்டு வெளியான தி ரோடு வாரியர், 2015ம் ஆண்டு வெளியான மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு, 2021ம் ஆண்டு வெளியான தி சூசைடு ஸ்குவாட் மற்றும் 2024ம் ஆண்டு கடைசியாக வெளியான மேட் மேக்ஸ் படமான ஃப்யூரியோஸா : எ மேட் மேக்ஸ் சாகா உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கை நோரிஸ் இந்த படத்துக்கு வேறலெவலில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X