கால் முழுசா குணமாகிடுச்சு.. மீண்டும் எஸ்.ஜே. சூர்யா பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய யாஷிகா ஆனந்த்!
சென்னை: கார் விபத்தில் கால் முதல் உடல் முழுக்க காயங்களை சந்தித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

கவர்ச்சி பாப்பா
மிகவும் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகை யாஷிகா ஆனந்த் கிளாமர் கதாபாத்திரங்கள் மற்றும் அடல்ட் கன்டென்ட் படங்களில் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களின் இதயத்தில் கிளாமர் குயினாக மாறி உள்ளார். இன்ஸ்டாகிராமிலும் எந்தவொரு கன்ட்ரோலும் இல்லாமல் தாராளமாக புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்டாகி வருகிறார்.

கேரியரே காலி
இனிமேல் எழுந்து நடப்பாரா என்பதே சந்தேகமாக மாறி விட்டது. வாழ்க்கையே போய்விட்டது என்றும் இனிமேல் கமிட் ஆன படங்களில் அவர் நடிப்பது கஷ்டம் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் பரவின. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தான் கவர்ச்சியை தள்ளி விட்டு கடமையை செய், சல்பர் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்தார் யாஷிகா ஆனந்த்.

மீண்டும் பழையபடி
3 மாதங்களுக்கு மேல் மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் வீடு திரும்பினார். கொஞ்சம் கொஞ்சமாக நடை பயிற்சி பழகிய யாஷிகா ஆனந்த் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 வீட்டுக்குள் முன்னாள் காதலரான நிரூப் மற்றும் மற்ற போட்டியாளர்களை சந்தித்தார். மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து
இந்நிலையில், தற்போது எஸ்.ஜே. சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வந்த கடமையை செய் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். கடற்கரை அருகே எஸ்.ஜே. சூர்யா மற்றும் படக்குழுவினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

சேலை கட்டிய ஒண்டர் உமன்
எரிந்து சாம்பலானாலும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து பறக்க வேண்டும் என கேப்ஷன் கொடுத்து சேலை கட்டிய ஒண்டர் உமனாக மாறியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











