பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் "பொம்மை நாயகி" படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடியனாக மிக பிஸியாக நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு
பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் நீலம் புரோடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்
அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.

சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து
பார்த்தவுடனேயே சிரிக்கக் கூடிய காமெடி காட்சிகள், யார் மனதையும் புண்படுத்தாத டைமிங் கெளண்ட்டர்கள் என தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி காமெடியனாக உள்ளவர் நடிகர் யோகி பாபு. விஜய், அஜித்,ரஜினிகாந்த், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக கலக்கியுள்ளார். காமெடியனாக நடித்து வரும் அதே சமயம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

மண்டேலா பல்வேறு விருதுகளை
கடைசியாக யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. மண்டேலா திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்ற நடிகர் யோகிபாபு பல்வேறு விருதுகளையும் அதற்காக வென்றார்.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் பொம்மை நாயகி
மற்ற நடிகர்களைப் போல் காமெடியனாக இருந்து ஹீரோவான பிறகு நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் சிறு கதாபாத்திரம் என்றாலும் கதை பிடித்திருந்தால் கட்டாயமாக நடிக்கும் பண்பு கொண்ட யோகிபாபு அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் பொம்மை நாயகி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

வித்தியாசமான கதை களத்தில்
பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் பொம்மை நாயகி படத்தை தயாரித்து வருகிறது . வழக்கமான படங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதை களத்தில் சமுதாயத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றது
இந்த நிலையில் பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் யோகிபாபு உடன் இணைந்து சுபத்ரா, எஸ் எம் குமார், ஹரி, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொம்மை நாயகி படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications