ஆர்ஜே பாலாஜி படத்தில் கெஸ்ட் ரோல்...ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோவை பகிர்ந்த யோகிபாபு
சென்னை : பாலிவுட்டில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்த Badhaai Ho படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாக்யராஜ் பட டைட்டிலான வீட்ல விசேஷங்க என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷுட்டிங் கோவையில் துவங்கி நடந்து வருகிறது. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்கிறாராம். இதில் சிறப்பு தோற்றத்தில் தான் யோகிபாபு நடிக்கிறாராம். ஆர்ஜே பாலாஜியுடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ள யோகிபாபு, ஆர்ஜே பாலாஜி படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் என குறிப்பிட்டுள்ளார்.
யோகி பாபு ஏற்கனவே பீஸ்ட், வலிமை, அருண் விஜய் நடிக்கும் யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வீட்ல விசேஷங்க படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடிக்க போவது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது, யோகிபாபுவின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த ரோலில் தான் ஆர்ஜே பாலாஜி நடிக்கிறாராம். இந்த படத்திற்கு என்ஜே சரவணனுடன் இணைந்து கதை எழுதி, டைரக்ட் செய்ய போகிறார் ஆர்ஜே பாலாஜி. ஆர்ஜே பாலாஜியின் முந்தைய படமான மூக்குத்தி அம்மன் படத்தில் என்ஜே சரவணனும் ஒரு ரோலில் நடித்திருப்பார்.
சூரரை போற்று படத்தில் நடித்த அபர்னா பாலமுரளி, சான்யா மல்கோத்ரா நடித்த ரோலில் நடிக்கிறாராம். சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் ஆர்ஜே பாலாஜியின் பெற்றோர்களாக நடிக்க உள்ளனராம். கோவை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட உள்ளதாம்.
வீட்ல விசேஷங்க படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் 30 முதல் 40 நாட்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்துள்ள போனி கபூர் தான் இந்த படத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











