தீபாவளி ஸ்பெஷல்-நாலு ஒரிஜினல், ஒரு டப்பிங்!
தீபாவளிப் படங்கள் ஒரு வழியாக இறுதி செய்யப்பட்டுவிட்டன. இன்றைய நிலவரப்படி, வல்லக்கோட்டை, மைனா, வ குவார்ட்டர் கட்டிங் மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய நான்கு ஒரிஜினல் தமிழ்ப் படங்களும், ஸ்ட்ரீட் டான்ஸர் என்ற 3 டி டப்பிங் படமும் வெள்ளிக்கிழமை தீபாவளி் விருந்தாக வெளியாகின்றன.
எந்திரன் வெளியாகி ஒரு மாதமாகிவிட்டது. தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் எந்திரனே இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. கிராமப்புற திரையரங்குகளில் 65 சதவீத கூட்டமும், நகர்ப்புற திரையரங்குகளில் 80 சதவீத கூட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 1 மாதத்தில் 10க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளியாகி புஸ்வாணமாகிவிட்டன.
தொட்டுப்பார் மற்றும் ஒச்சாயி படங்கள் சுமாராக ஓடிக் கொண்டுள்ளன. எந்திரன் தவிர்த்துப் பார்த்தால் இந்த இரு வாரங்களாக, புதிய படங்களால் 1 சதவீத வருவாய் கூட இல்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் புலம்புகின்றன.
இந்த சூழலில் நான்கு புதிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன. ஸ்ட்ரீட் டான்ஸர் ஆங்கிலத்திலிருந்து டப் செய்யப்பட்ட படம். முற்றிலும் 3டி செய்யப்பட்டது.
தீபாவளிக்கு வரவுள்ள படங்களில் மைனா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ளதாக திரையுலகில் ஏற்கனவே புகழ ஆரம்பித்துள்ளனர்.
வ குவார்ட்டர் கட்டிங், படம் குடிகாரர்களுக்கான படம் போலத் தெரிகிறது. படத்தின் விளம்பரம் வித்தியாசமாக உள்ளது. படத்தில் சரக்கு இருக்குமா என்பதை படம் வந்த பிறகுதான் பார்க்க முடியும்.
வல்லக்கோட்டை அர்ஜூன் நடிப்பில் உருவாகி வெளியாகிறது.
உத்தமபுத்திரன் தனுஷ், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படத்தின் ரீமேக்.
தீபாவளி ரேஸில் எந்தப் படம் பட்டாசாகப் பொறியப் போகிறது என்பது படத்தின் தரத்திலும், ரசிகர்களின் ஆதரவிலும் உள்ளது.


Click it and Unblock the Notifications











