செப்டம்பரில் 6-குஷியில் கோலிவுட்!

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 6 படங்கள் திரைக்கு வருகின்றன. சென்னை 600028 என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள சரோஜா இதில் முக்கியமானது.
இந்தப் படமும் வித்தியாசமான திரைக்கதையுடன் கூடியதாக கூறப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்தின் விநியோகத்தை வாங்கியுள்ளது. குசேலனால் நஷ்டப்பட்டதாக கூறும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சரோஜாவை குறைந்த விலைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த பெரிய படம் தனம். இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில், சங்கீதாவின் வில்லங்கமான கேரக்டரில் உருவாகியுள்ள தனம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவதாசி பெண்ணாக இப்படத்தில் வருகிறார் சங்கீதா. உயிர் படத்திற்குப் பிறகு அவர் ஏற்றிருக்கும் வில்லங்கமான கேரக்டர் இது என்பதால் இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த படம் அலிபாபா. இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
இதுதவிர விஜய் கெஸ்ட் ரோல் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம், சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ராமன் தேடிய சீதை ஆகிய படங்களும் செப்டம்பரில் ரிலீஸாகின்றன.
அதேபோல நாசர் நடிப்பில் உருவாகியுள்ள வித்தியாசமான படமான பொய் சொல்லப் போறோம் படமும் செப்டம்பரில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
6 படங்கள் திரைக்கு வருவதால் கோலிவுட் மீண்டும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











