twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இஸ்கபராரா... இஸ்கபராரா... ரெட்ட ரெட்ட மனசே...'

    By Staff
    |

    Nellai Barathy
    -என்ன இது என்கிறீர்களா...? பட்டாளம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல். பாடலில் விசேஷம் பற்றி அப்புறம் பார்ப்போம்... இதை எழுதியவரைப் பற்றி சொல்வதில்தான் விசேஷம் இருக்கிறது.

    இந்தப் பாடலை எழுதியவர் நெல்லை பாரதி. தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரகளில் ஒருவர். சன் குழுமத்தின் 'வண்ணத்திரை' திரைப்பட பத்திரிகையின் பொறுப்பாசிரியர் இவர்.

    எழுத்திலும், அதை மேடையில் பேசும் விதத்திலும் தனித்த திறமை இவருக்கு உண்டு. அதைத் தெரிந்து கொண்ட லிங்குசாமி, தனது சகோதரர் சுபாஷ் தயாரித்த பட்டாளம் படத்தில் ஜாஸிகிஃப்ட் இசையில் பாடல் எழுதும் வாய்ப்பை பாரத்திக்குத் தர, தனது புதிய பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

    படத்தின் விளம்பரங்கள், ட்ரெய்லர்கள் தொடர்ந்து இந்தப் பாடலே ஒலிக்க, அந்தப் படத்தைவிட, பாடல் வெகு பிரபலமாகிவிட்டது.

    விளைவு... வரிசையாகப் பட வாய்ப்புகள் வந்துள்ளன நெல்லைபாரதிக்கு.

    வீ‌.தஷி‌ இசை‌யி‌ல்‌ பயணங்‌கள்‌ முடி‌வதி‌ல்‌லை‌, கா‌தல்‌தோழி‌, என்‌ பெ‌யர்‌ குமா‌ரசா‌மி‌, படங்‌களுக்‌கும்‌, பெ‌ன்‌னி‌ தயா‌ள்‌, கி‌ரே‌ஸ்‌ கருணா‌ஸ்‌ குரல்‌களி‌ல்‌ கண்‌கள்‌ இரண்‌டா‌ல்‌ படத்‌துக்‌கும்‌, ரெ‌ஹை‌னா‌ இசை‌யி‌ல்‌ ஹரி‌ஷ்‌ ரா‌கவே‌ந்‌தி‌ரா‌ குரலி‌ல்‌ பே‌சுவது கி‌ளி‌யா‌ படத்‌துக்‌கும்‌ பா‌டல்‌ பதி‌வு‌கள் கூட முடி‌வடை‌ந்‌துவி‌ட்‌டன.

    அடுத்‌து வீ‌.தஷி‌‌, ரெ‌ஹை‌னா, கருணா‌ஸ்‌, இசை‌யி‌லும், இயக்‌குநர்‌கள்‌ லி‌ங்‌குசா‌மி‌, எஸ்‌.பி‌.ஜனநா‌தன்‌, மோ‌னா.‌பழனி‌ச்‌சா‌மி‌, ரோ‌ஹன்‌ கி‌ருஷ்‌ணா‌, சுப்‌ரமணி‌யம்‌சி‌வா‌, தா‌மி‌ரா‌, நந்‌தா‌ பெ‌ரி‌யசா‌மி‌, பி‌ருந்‌தா‌சா‌ரதி‌, பா‌ர்‌த்‌தி‌ பா‌ஸ்‌கர்‌, பன்‌னீ‌ர்‌செ‌ல்‌வம்‌, அபி‌மன்‌யூ‌, பா‌பு‌.கே‌.வி‌ஸ்‌வநா‌த்‌, பு‌வனை‌கண்‌ணன்‌ ஆகி‌யோ‌ரது படங்‌களுக்‌கும்‌ பா‌டல்‌ எழுத வா‌ய்‌ப்‌பு‌கள்‌ வந்‌துள்‌ளன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X