டிச. 25ல் ஆமிரின் 3 இடியட்ஸ்!

ஆமிர்கான், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ள 3 இடியஸ்ட் படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.
விது வினோத் சோப்ரா தயாரிக்க, ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில், ஆமிர்கான், மாதவன், கரீனா கபூர் ஆகியோர் நடிக்க உருவாகியுள்ள படம் 3 இடியட்ஸ். கஜோல், கெளரவ வேடத்தில் தலை காட்டியுள்ளார்.
இப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இந்தி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது பிளாக்கில், கிறிஸ்துமஸுக்குப் படம் திரைக்கு வரும் என்று எழுதியுள்ளார் ஆமிர்கான்.
தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தை பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதை மாற்றி விட்டார் ஷாருக். கிறிஸ்துமஸைத் தாண்டித்தான் ஷாருக்கின் படம் ரிலீஸாகுமாம்.


Click it and Unblock the Notifications











