அபுதாபியில் டிச. 10ல் எஸ்.பி.பி.க்கு பாராட்டு விழா: சிறப்புரை பாரதிராஜா

இந்திய தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவும், பாரதியும் சேர்ந்து பிரபல பாடகர் பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்ரமணியத்திற்கு பாராட்டு விழா நடத்துகிறது. இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று பெயரிடப்பட்டடிருக்கும் இந்த விழா வரும் 10-ம் தேதி மாலை 6 மணி அளவில் ஏர்போர்ட் ரோட்டில் அல் ஜெசீரா அரங்கிற்கு அருகில் இருக்கும் நேஷனல் தியேட்டரில் நடக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் திரு. எம். கே. லோகேஷ் தலைமை வகிக்கிறார். ராஜேஷ் வைத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதி ராஜா சிறப்புரை ஆற்றுகிறார். இந்த இனிய விழாவில் அபுதாபி மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து தகவல் அறிய விரும்புவோர் இம்மூன்று எண்களில் 050 1223935 / 055 4538660 / 050 5865375 பாரதி குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











