பாலிவுட்டை தட்டிக்கழித்த பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானி
பில்லியர்ட், ஸ்னூக்கர் விளையாட்டில் ஹீரோவாக இருக்கும் பங்கஜ் அத்வானியை இந்தி படத்தில் ஹீரோவாக்க முயன்றுள்ளனர் பாலிவுட் இயக்குநர்கள். ஆனால் தான் பிசியாக இருப்பதாகக் கூறி அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனக்கு பாலிவுட்டில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் ஆகியவற்றை நான் மட்டும் தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமானால் இந்த விளையாட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற வேண்டும். என்னால் 1 அல்லது 2 மாதங்களுக்கு மேல் ஓய்வெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்மையில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்தவர் பங்கஜ் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில் தான் தங்கம் வெல்வோம் என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












