பிரேம்ஜிக்கு பெண் தேவை!

கங்கை அமரனின் புதல்வரான பிரேம்ஜி அமரன் தந்தை வழியில் இசையில் கரைத்துக் குடித்தவர். அதே சமயம், நடிப்பிலும் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார் - காமெடியில்.
சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சிம்புவுடன் வல்லவன் உள்ளிட்ட படங்களில் தலை காட்டினார். தற்போது கோவா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் பிரேம்ஜிக்கு திடீரென பெண் பார்க்க ஆரம்பித்து விட்டனராம். என்ன காரணம் என்றால், பிரேம்ஜி கிட்டத்தட்ட தினசரி பார்ட்டிக்குப் போக ஆரம்பித்துள்ளாராம். டான்ஸ், பாட்டு, ஆட்டம் என அவர் புதுப் பாதையில் போக ஆரம்பித்திருப்பதால் கங்கை அமரன் குடும்பத்தினர் சற்றே குழம்பிப் போய் விட்டனர்.
கால் கட்டுப் போட்டு பிரேம்ஜியைக் கட்டுப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கில்தான் தற்போது பெண் பார்க்கும் படலம் நடந்து வருகிறதாம்.
ஆனால் பிரேம்ஜிக்கோ இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு கல்யாணம் செய்து கொள்ளலாமே என்று ஆசையாம். ஆனால் முதலில் கல்யாணம் என்ற முடிவில் கங்கை அமரன் குடும்பத்தினர் ஸ்டிரிக்ட்டாக உள்ளனராம்.
என்ன கொடுமை சார் இது, கொஞ்ச நாளைக்கு பிரேம்ஜியை ஃப்ரீயா விடக் கூடாதா..?


Click it and Unblock the Notifications











