சிரஞ்சீவி சினிமாவை நம்பி தோற்றார்-ஜீவிதா

By Staff

Jeevitha and Jayasudha
சினிமா புகழ் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிரஞ்சீவி அரசியலில் குதித்தார். ஆனால், அதில் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது என நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஜீவிதா. நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நடிகர் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம் கட்சி குறிப்பிடத் தகுந்த ஓட்டுக்களை பெற்ற போதிலும் 18 சட்டசபை சீட்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இந் நிலையில் ஜீவிதா நிருபர்களிடம் பேசுகையில்,

சிரஞ்சீவி சினிமாவில் தனக்கு இருக்கும் புகழை நம்பி அரசியலுக்கு வந்து ஏமாந்துவிட்டார். அவரது சினிமா கவர்ச்சி ஆந்திர மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

சினிமா நடிகர், நடிகைகளை தற்போதைய மக்கள் வேடிக்கை பார்க்க தான் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க முன்வர மாட்டார்கள். மக்களிடம் யார் நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு தான் ஓட்டு விழும். சிரஞ்சீவியால் அது முடியாது.

அவர் மக்களுடன் நெருங்கி பழகமாட்டார். அவரை நினைத்தாலும் அவரை சுற்றி இருக்கும் விஐபி கூட்டம் அதை தடுத்து நிறுத்திவிடும். இதனால் அவருக்கும் கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்களின் மனநிலை, மன ஓட்டம் எதுவும் தெரியாது.

அவர் தனது சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி தேர்தலில் களமிறங்கினார். அதனார் தான் தோற்றுபோனார் என்றார் ஜீவிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X